Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனின் பட தலைப்பிற்கு செக் வைத்த தயாரிப்பு நிறுவனம்- கடைசியில் இப்படியாகிவிட்டதே

சிவகார்த்திகேயன் பி.எஸ்.மித்ரனின் ஹீரோ படத்திலும் இன்று நேற்று நாளை பட இயக்குனருடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இரு படமும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இதற்கிடையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இவர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் ஆரம்பமானது.

அண்ணன் தங்கை பாசத்தை சொல்லும் இப்படத்தின் தலைப்பை எம்.ஜி.ஆர் பட தலைப்பான எங்க வீட்டு பிள்ளை என வைக்க படக்குழு முடிவு செய்திருந்த நேரத்தில் அப்படத்தை தயாரித்திருந்த விஜயா ப்ரோட்க்‌ஷன்ஸ், எங்க வீட்டுப்பிள்ளை பட டைட்டில் உரிமையை இதுவரை வேறு நபர்களுக்கோ, அல்லது வேறு நிறுவனங்களுக்கோ வழங்கப்படவில்லை என கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.