Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மூத்த நடிகர் சட்டையை பிடித்து இழுத்த தனுஷ்.. ஷாக் ஆன படக்குழு

தமிழில் எப்போதும் பிசியாக இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி ஹிந்தியில் சில படங்கள் நடித்துள்ளார் அவர்.

அவர் நடிகர் அமிதாப் பச்சன் உடன் ஷமிதாப் படத்தில் நடித்தபோது ஒரு சீனில் அவரை சட்டையை பிடித்து இழுப்பது போன்ற காட்சி இருக்கும்.

அதன் ஷூட்டிங் செய்யும் போது தனுஷ் எதையும் யோசிக்காமல் அமிதாப் சட்டையை வேகமாக பிடித்து இழுத்துவிட்டாராம். அதை பார்த்துக்கொண்டிருந்த மற்றவர்கள் கொஞ்சம் ஷாக் ஆகிவிட்டனராம். அனைவரும் ஒரு மாதிரி பார்ப்பதை கவனித்த தனுஷுக்கு அப்போது தான் புரிந்துள்ளது.

உடனே சென்று அமிதாப் இடம் மன்னிப்பு கேட்டாராம் அவர்.