சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் தற்போது முப்ஃடி என்ற கன்னட பட ரீமேக்கில் நடித்து வருகின்றார்.
இப்படத்தில் கௌதம் கார்த்திக் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார், இப்படம் முடிந்த கையோடு சிம்பு மாநாடு படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளார்.
இதை தொடர்ந்து சீமான் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது, அதுக்குறித்து சிம்பு தற்போது மனம் திறந்துள்ளார்.
அதில் ‘நான் ஒரு கதையை தயார் செய்து பல நாயகர்களிடம் சென்றேன், தயாரிப்பாளர் தயார் என்றாலும், நடிகர்கள் ஓடினார்கள்.
ஆனால் சிம்பு நடிக்க சம்மதித்தவுடன் தயாரிப்பாளர் பயந்து படம் தயாரிக்க முன் வருவது இல்லை’ என கூறியுள்ளார்.