Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹாலிவுட் பட வாய்ப்பை நிராகரித்த விக்ரம்! அவர் சொன்ன காரணம் இதுதான்

நடிகர் சீயான் விக்ரம் நடிப்பு திறமையை பார்த்து வியந்தவர்கள் ஏராளம். துருவ நட்சத்திரம் படத்தில் அவரது தோற்றத்தை பார்த்து அவர் ஹாலிவுட் நடிகர் போல இருக்கிறார் என்று தான் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது விக்ரம் தான் ஒரு ஹாலிவுட் பட வாய்ப்பை நிராகரித்ததாக தெரிவித்தார். ஜான் விக் பட புகழ் Keanu Reeves படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததாம். அது மிகச்சிறிய ரோல் என கூறி தான் அவர் அதை நிராகரித்தாரம்.

"ஆசிய மார்க்கெட்டில் படத்தை ஓட்டுவதற்காக இப்படி இந்திய நடிகர்களுக்கு சின்ன சின்ன ரோல்கள் தருகின்றனர். இந்த tacticsக்கு விழுந்துவிடக்கூடாது" என விக்ரம்கூறியுள்ளார்.