Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் விக்ரமின் புதிய லுக்கை பார்த்தீர்களா? மெர்சலான நெட்டிசன்ஸ்

கோலிவுட்டில் படத்திற்காக கடுமையாக உழைக்கும் நடிகர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் ஒருவர் நடிகர் விக்ரம்.

கடந்த கால படங்களில் இவரது நடிப்பு திறமையை பார்த்து வியக்காதவர்களே இருக்க முடியாது. அப்படிப்பட்ட இவரது நடிப்பில் கடாராம் கொண்டான் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் விக்ரம் தனது நியூ லுக்கில் கடாராம் கொண்டான் பட ஆடியோ லாஞ்ச்சில் காட்சியளித்துள்ளார். இது இவர் அடுத்ததாக நடிக்கவுள்ள அஜய் ஞானமுத்துவின் படத்திற்காக என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் விக்ரம் தனது அடுத்த படத்திற்கான லுக்கில் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிகளில் பொதுவாக கலந்து கொள்ள மாட்டார்.