Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்நேர்கொண்ட பார்வையின் போட்டி படமான பிரபாஸின் சாஹோவிற்கா இப்படியொரு நிலைமை?

அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகவுள்ளதாக சில மாதங்களாகவே கூறப்பட்டு வந்தது.

அதன்படி சில நாட்களுக்கு முன் படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட்-8 என்று அறிவிக்கப்பட்டது. நேர்கொண்ட பார்வை படம் எங்கு நன்றாக ஓடினாலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுமாராக தான் ஓடும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

இதற்கு காரணம் தெலுங்கில் பிரபாஸின் நடிப்பில் கடந்த 2 வருடங்களாக உருவாகி வருகின்ற சாஹோ படம் வருகின்ற சுதந்திர தினத்திற்கு வெளியாகவுள்ளது தான். இப்படத்தின் ரிலீஸால் தமிழை தவிர மற்ற அனைத்து மொழிகளிலும் கூட நேர்கொண்ட பார்வை படம் சிறிது வசூலை இழக்க நேரிடும்.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், படம் 2 வருடங்களாக உருவாகியுள்ளதால் போஸ்ட் செய்வதற்கு இன்னும் இருக்கும் நாட்கள் போதாதாம். இதனால் படத்தின் ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் 30க்கு தள்ளி வைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இசையமைப்பாளரை மாற்றியதும் இந்த தாமதத்திற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த செய்தி பிரபாஸின் ரசிகர்களை கவலையடைய செய்திருந்தாலும் அஜித் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.