Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவுடன் இணைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷங்கர்! பிரமாண்டத்தின் உச்சம் இதுதான்

நடிகர் சூர்யாவின் NGK படம் சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து காப்பான் படம் அடுத்த மாதம் 30ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதன் டிரைலர் கடந்த மாதம் வெளியாகியிருந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த வாரம் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி இந்நிகழ்ச்சியினை நடத்தவுள்ளது. இந்நிலையில் நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த ஆடியோ லாஞ்ச்சில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் பங்கேற்கவுள்ளனராம்.

இப்படத்தினை தயாரிக்கும் லைகா ப்ரோடக்‌ஷனின் தயாரிப்பில் ரஜினிகாந்த், ஷங்கர் பணியாற்றியுள்ளதால் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க இருவரும் பங்கேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.