Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி! ரஜினி, கமல், சூர்யா - மக்களால் மறக்க முடியாத சம்பவங்கள்

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா என மிக முக்கிய ஆளுமைகளாகிவிட்டார்கள். இதில் அரசியல் விசயங்களில் இவர்களின் பெயர் அடிபடாமல் இருந்ததில்லை. அவர்களின் மீதான அரசியல் எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.

அஜித் ஓட்டு போடுவது என் முக்கிய கடமை. அரசியலில் ஈடுபடவிருப்பமில்லை என கூறிவிட்டார். அரசின் சில விசயங்கள் குறித்தும் தங்கள் எதிர்கருத்துக்கள் முன்வைத்து வருகிறார்கள்.

அண்மையில் சூர்யா நீட் தேர்வு, பாடத்திட்டத்தில் மும்மொழி என கல்வி முறை பற்றி கருத்து தெரிவிக்க அது அரசியல் சர்ச்சையானது. கமல்ஹாசனும் இதற்காக சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் அவ்வப்போது அரசியல் விமர்சனங்கள் கூறிவந்தாலும் 1996 ம் ஆண்டிலேயே ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட்டால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என கூறியது பெரும் சர்ச்சையானது.

அதே போல கமல்ஹாசன் தற்போது முழு அரசியலில் இறங்கிவிட்டாலும் அன்றே சென்னை வெள்ளத்தின் போது எதற்கு டொனேசன், வரி கட்டியவர்களின் பணம் எங்கே என கேள்வி எழுப்பினார்.

விஜய்யும் ரூபாய் நோட்டு செல்லாது என்ற நடவடிக்கையின் போது 20 சதவீத மக்களுக்காக 80 சதவீத மக்கள் பாதிப்படைகிறார்கள் என கூறினார்.