Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெடித்தது போராட்டம்.. பிக்பாஸ் பிரபலத்தின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் ஆபாசம் இருக்கிறது, அதற்கு சென்சார் வேண்டும் என கேட்டு தெலுங்கானா நீதிமன்றத்தில் K Jagadishwar Reddy என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் தீர்ப்பு இன்னும் வரவில்லை.

இந்நிலையில் படுக்கைக்கு வந்தால் தான் பிக்பாஸ் வாய்ப்பு என கூறியதாக இரண்டு பெண்கள் தெலுங்கு பிக்பாஸ் குழு மீது போலீஸ் புகார் அளித்துள்ளது. அதன் விசாரணையும் நடந்து வருகிறது. இதனால் ஷோ பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸுக்கு எதிராக உஸ்மானியா பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பிக்பாஸ் தெலுங்கு மூன்றாவது சீசனை தொகுத்து வழங்கும் நாகார்ஜூனா வீட்டின் முன்பு போராட்டம் நடத்தவும் மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதனால் அவரது வீட்டின் முன்பு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.