இயக்குனரும் பிரபல தமிழ் அரசியல்வாதியுமான சீமான் பல தரமான படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளார்.
ஆனால் எப்போது அரசியலுக்கு சென்றாரோ அப்போதிலிருந்து சில நடிகர்களை தாக்கி பேசி வருகிறார். அப்படி அவர் தாக்கி பேசும் நடிகர்களில் ரஜினி எப்போதும் இருந்தாலும் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய்யை தரக்குறைவாக பேசியிருந்தார்.
ஆனால் இப்போது நடிகர் சூர்யாவின் சமீபத்திய பேச்சுக்கு ஆதரவாக பேசிய சீமான், அந்த துணிச்சல் மற்றவர்களுக்கு இல்லை என்றால் வெட்கப்பட வேண்டும். பஞ்ச் டைலாக் படத்தில் பேசினால் மட்டும் போதாது. வெளியில் வந்து பேச வேண்டும் என கூறியுள்ளார்.