Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உனக்கு ஒரு வயசு இருக்கும்போது.. சூர்யா பற்றி சத்யராஜ் உருக்கமாக பேசிய வீடியோ

இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னணி நட்சத்திரங்கள் பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சத்யராஜ் சூர்யாவை வாழ்த்தி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

"சூர்யா பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீ ஒரு வயது குழந்தையாக இருக்குற வரைக்கும் உன்னை தூக்கி கொஞ்சியிருக்கேன். உன்னுடைய எத்தனையோ பிறந்தநாளுக்கு போனில் வாழ்த்து சொல்லியிருக்கேன். இந்த முறை பிறந்தநாள் வாழ்த்தை சமூக வலைத்தளத்தில் சொல்கிறேன். இன்னைக்கு தான் நான் உன்னை பார்த்து பெருமை படுகிறேன். நமக்கேன் வம்பு என்பது சராசரி மனுஷனுக்கு இருக்கும் மனநிலை. பணம் சம்பாதித்துவிட்டால் அது இன்னும் அதிகம் இருக்கும். ஒரு மாஸ் ஹீரோவாக சமூக நீதிக்கு குரல் கொடுப்பது சில எதிர்ப்புகளை கொண்டுவரும். அதை தாண்டி நீ குரல்கொடுத்ததை பெருமையாக கருதுகிறேன்" என சத்யராஜ் பேசியுள்ளார்.