Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காமெடிக்கு கூட சுதந்திரம் இல்லையா.. சர்ச்சைக்கு சந்தானம் பதிலடி

சந்தானம் நடித்துள்ள ஏ1 படத்தின் டீஸர் சமீபத்தில் பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. படத்தில் பிராமணர்களை இழிவுபடுத்தும் விதமாக வசனங்கள் இருப்பதாக எதிர்ப்பு வந்தது.

இதுபற்றி இன்று நடந்த பிரஸ் மீட்டில் சந்தானம் பேசினார். "பிராமின் பெண்ணுக்கும் பிராமின் பையனுக்கும் காதல் என்றால் அதில் காமெடி பண்ண முடியாது, இல்லை லோக்கல் பையனுக்கும் பொன்னுக்கும் காதல் என்றால் அதை வைத்து காமெடி பண்ண முடியாது. ஒரு conflict இருந்தால் தான் காமெடி வரும், அதனால தான் பிராமின் பெண்-லோக்கல் பையன் என கதை தேர்ந்தெடுத்தோம். காமெடிக்கு freedom வேண்டும். அது பண்ணக்கூடாது, இது பண்ணக்கூடாது என்றால் காமெடி எப்படி வரும். நான் போய் தியேட்டர்ல எல்லார் அக்குள்லயும் கைவிட்டு கிச்சுகிச்சு மூட்டி தான் சிரிக்க வைக்கணும்."

"வேலை வெட்டி இல்லாமல் சும்மா சுத்துறவங்க பப்லிசிட்டிகாக இப்படி சர்ச்சை கிளப்புறாங்க" என சந்தானம் கோபத்துடன் பேசியுள்ளார்.