Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கிட்னி மாற்று அறுவை சிகிச்சை? உடல் எடை குறைந்தது ஏன்? - அவரே கூறிய பதில்

பாகுபலி படத்தில் மிக பிரமாண்ட உடல் தோற்றத்தில் இருந்த நடிகர் ராணா தற்போது அதிகம் ஒல்லியாகிவிட்டார். அவருக்கு கிட்னி செயலிழந்துவிட்டது, அதற்காக சிகிச்சை பெற்று வருவதால் தான் இப்படி உடல் எடை இழந்துவிட்டார் என செய்திகள் பரவியது.

விரைவில் அமெரிக்காவில் ராணா கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளவுள்ளதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்தி பரவியது.

இந்நிலையில் உடல் எடை குறைந்தது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள ராணா, "எப்போதும் மான்ஸ்டர் போல இருக்க வேண்டுமா என்ன?" என கேட்டுள்ளார்.

மேலும் சிறுநீரக அறுவை சிகிச்சை பற்றி கேட்டதற்கு, "அது பற்றிய செய்திகளை படிக்காதீர்கள்" என கூறியுள்ளார்.

இதன்மூலம் இதற்குமுன் வந்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.