Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் அந்த விஷயத்துக்கு மிகவும் தகுதியானவர்- தல பற்றி ஐஸ்வர்யா ராய்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற படத்தில் அஜித், ஐஸ்வர்யா ராய் இருவரும் நடித்திருந்தனர். அண்மையில் ஐஸ்வர்யா ராய் சென்னையில் உள்ள ஒரு கடை திறப்பு விழாவிற்கு வந்திருந்தார்.

அப்போது பேசிய அவர் மணிரத்னம் புதிய படத்தில் தான் நடிப்பது உறுதி என கூறியுள்ளார். அதோடு அஜித் பற்றி பேசிய அவர், அஜித் மிகவும் அமைதியான ஒரு நல்ல மனிதர், அவர் வெற்றிகரமாக இருப்பது சந்தோஷம், அவரது ரசிகர்கள் துணை இருப்பது பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.

இதுபோன்ற வெற்றிக்கு அவர் மிகவும் தகுதியானவர், அவரது குடும்பத்தினரை கூட நான் ஒரு நாள் பார்த்துள்ளேன். இனி அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் வெற்றிக்கு நான் வாழ்த்து கூறுவேன் என்று பேசியுள்ளார்.