Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அவதார் பட வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்! காரணம் இதுதானாம்

அவதார் உலகளவில் பெரிதும் பேசப்பட்ட ஒரு ஹாலிவுட் படம். அனிமேஷன் கொண்டு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் உலகளவில் பெரும் வசூல் சாதனை ஈட்டி முன்னிலையில் இருக்கிறது. இப்படத்தின் 2 ம் பாகம் 2020 டிசம்பரில் வரவுள்ளது. அதன்பிறகு இரண்டுவருட இடைவெளியில் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும்.

இந்நிலையில் பாலிவுட் சினிமா புகழ் பிரபல நடிகர் கோவிந்தா இப்படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும், இயக்குனர் படத்திற்காக 410 நாட்கள் கால்ஷீட் கேட்டதாகவும், படப்பிடிப்பு நாட்கள் முழுக்க உடம்பை நீல நிற பெயிண்ட் அடித்திருக்க வேண்டும் என கூறியதால் அமைதியாக வாய்ப்பை நிராகரித்ததாக பேட்டியில் கூறியுள்ளார்.