Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வைரலாகும் அஜித் துப்பாக்கி சுடும் போட்டோ! அதன் பின்னால் உள்ள ரகசியம்

நடிப்பது மட்டுமின்றி ரேஸ் உள்ளிட்ட மற்ற சில விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் தல அஜித். அவர் ஏரோ மாடலிங், போட்டோகிராபி என அடிக்கடி புதிது புதிதாக செய்கிறார்.

சமீப காலமாக அஜீத் துப்பாக்கி சுடும் பயிற்சியும் எடுத்து வருகிறார். அதன் புகைப்படங்களும் அடிக்கடி வெளியாகின. இந்நிலையில் இன்று அஜித்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது.

அது தமிழ்நாடு அளவிலான 45-வது துப்பாக்கிச் சுடும் போட்டியில் அஜித் பங்கேற்று தன்னுடைய திறமையை காட்டுவதற்காக பயிற்சி மேற்கொள்ளும் போது எடுத்த போட்டோ தான்.

இந்த போட்டிகள் கோயம்பத்தூரில் நடந்து வருகிறது. இதற்காக அஜித் ரசிகர்கள் #ThalaAJITHatRifleChampionship என்கிற டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.