Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியை கலாய்த்த ஜெயம்ரவியின் கோமாளி பட டிரைலர்- பொங்கியெழுந்த கமல், என்ன செய்துள்ளார் தெரியுமா

ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள கோமாளி படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. 90’s கிட்ஸ்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியிருந்த இந்த டிரைலர் இதுவரை 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

குறிப்பாக டிரைலரின் கடைசியில் வரும் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கலாய்க்கும் விதத்தில் அமைந்த, நான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற வசனத்திற்கு பாராட்டுகளை விட எதிர்ப்புகளே அதிகமாக வலுத்து வருகின்றன.

இந்த வசனத்திற்கு கோமாளி படக்குழுவினரிடம் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வராத நிலையில் இந்த டிரைலரை பார்த்த ரஜினியின் நீண்ட நாள் நண்பர் நடிகர் கமலஹாசன் அந்த வசனத்திற்காக உடனே கோமாளி படத்தின் தயாரிபாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என கூறி வருத்தப்பட்டாராம்.