Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் பிறந்தநாளின் போது அவரது ரசிகர்கள் செய்த கேவலமான செயல்- வீடியோ வெளியிட்டு வெளுத்து வாங்கிய ரசிகை

விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதியன்று அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடுவது அவரது ரசிகர்களின் வழக்கம்.

இது தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் தான். குறிப்பாக கேரளாவில் தமிழ் ரசிகர்களுக்கு இணையாக திருவிழா போல் கொண்டாடுவார்கள்.

ஆனால் சில சமயங்களில் சில ரசிகர்களால் விஜய்யின் பெயரும் அவமதிக்கப்படுகிறது.; அப்படி தான் தற்போது கேரளாவில் நடந்துள்ளது. அதாவது விஜய்யின் பிறந்தநாளுக்காக குழந்தை ஒன்றிற்கு தங்க மோதிரம் என்ற பெயரில் மோதிரம் ஒன்றை அணிவித்து போட்டோ வீடியோ எல்லாம் எடுத்து கொண்டாடிவிட்டு சென்றுள்ளனர்.

ஆனால் கடைசியில் பார்த்தால் அது தங்க மோதிரமே கிடையாதாம். இதனால் செம்ம வெறுப்பான அந்த குழந்தையின் சொந்தகாரர்கள் வீடியோ வெளியிட்டு தங்களது கோபத்தை தீர்த்துள்ளனர்.