Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபாஸிற்கு விரைவில் திருமணம்! பெண் யார்? சகோதரி அளித்த பேட்டி!

பாகுபலி படம் வெளியான பிறகு நடிகர் பிரபாஸ் இந்தியாவே திரும்பி பார்க்கும் நடிகராகிவிட்டார். அவர் தற்போது நடித்துவரும் சாஹோ படமும் ஹிந்தியில் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்த வருடத்திற்குள் பிரபாஸுக்கு திருமணம் நடைபெற்றுவிடும் என சென்ற ஆண்டு முதலே செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் செய்தி என்னவென்றால் பிரபாஸ் ஒரு தொழிலதிபரின் மகளை மணக்கவுள்ளார் என்பது தான். அவர் தற்போது அமெரிக்காவில் இருக்கிறாராம்.

பிரபாஸின் சகோதரி பிரகதி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிரபாஸின் திருமணம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "அவர் எப்போதும் எங்களுடன் நெருக்கமாக இருப்பார். ஷூட்டிங் இல்லாத சமயத்தில் எப்போதும் குடும்பத்துடன் தான் இருப்பார். உங்களை போல நாங்களும் அவரது திருமணத்திற்காகத்தான் காத்திருக்கிறோம். அவர் படங்களில் பிசியாக இருப்பதால் தேதி சரியாக தெரியவில்லை. ஆனால் அவரது திருமணதை நாங்கள் பெரிய அளவில் கொண்டாடுவோம்" என அவர் கூறியுள்ளார்.