Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் தனக்கு ஹிட் படங்களை கொடுத்த இயக்குனருடன் இணையும் சூர்யா!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர். இவரது நடிப்பில் கடைசியாக NGK படம் வெளியாகியிருந்தது.

கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் இவர் நடித்துள்ள காப்பான் படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சூர்யா மீண்டும் தனக்கு சிங்கம், ஆறு, வேல் போன்ற ஹிட் படங்களை கொடுத்த ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று மிகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சூர்யா, இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்திலும் அடுத்ததாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.