Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்தகட்ட நடவடிக்கை! ரகசியமாக நடக்கும் பிளான் இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது முழு அரசியலில் இறங்குவார் என ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதே நம்பிக்கையுடன் இருந்து வருகின்றது. அண்மையில் அவரின் அரசியல் வருகையை கிண்டல் செய்யும் விதமாக ஜெயம் ரவி நடிப்பில் வரவுள்ள கோமாளி படத்தின் டிரைலரில் இருந்த காட்சிகள் சர்ச்சைகளுக்கு பின் நீக்கப்பட்டது.

இத்துடன் ரஜினி அண்மையில் சென்ற விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பாராட்டி பேசியதை கொண்டு அரசியல் வட்டத்தினர் சில சர்ச்சைகளை உருவாக்கி வருகிறார்கள்.

தற்போது அவர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதன் பின் யாருடைய படம் என்பதை இன்னும் அவர் முடிவுசெய்யவில்லை. அடுத்து அவரின் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் அல்லது கார்த்திக் சுப்பராஜ் இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினி தர்பார் படம் முடிந்து இமயமலைக்கு ஓய்வுக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு நிலவும் கால சூழ்நிலையை பொறுத்து அவர் செப்டம்பர் மாதத்தில் செல்ல திட்டமிட்டுள்ளாராம்.