Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை பட ஷூட்டிங்கில் அஜித்திடம் ரங்கராஜ் பாண்டே கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா?

கடந்த வாரம் அஜித்தின் நடிப்பில் வெளியாகியிருந்த படம் தான் நேர்கொண்ட பார்வை. இப்படத்தில் அஜித் வக்கீலாக பரத் சுப்பிரமணியம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இணையத்தில் மிக பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் அஜித்திற்கு எதிராக வாதாடும் சத்தியமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே.

இவர் இப்படத்தில் அஜித்துடன் முதன்முதலில் பேசிய வசனம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசுகையில், படத்தில் கமிட்டாகி மூன்று மாதமாகியும் அஜித்தை நேரில் காட்டாமலே வெச்சிருந்தாங்க. ஒருவழியாக அவரை பார்த்தவுடனே, ‘தல இப்போவாவது உங்களை கண்ணுல காட்டுனாங்களே... கடைசி வரைக்கும் உங்களை மறைச்சே வெச்சிருவாங்களோ என்று நினைச்சேன்’ என சொன்னேன். அதுக்கு சிரித்தவர், 'நீங்க இந்த படத்தில் நடிக்கிறது எங்களுக்கு சந்தோசம்’என்று சொன்னார்.

அவர்கூட இருந்த இருபது நாள்கள் ரெண்டு பேரும் நிறைய பேசினோம். அவருடைய வேலையில் ரொம்ப தெளிவாக இருக்கார். சினிமா, அரசியல், ஊடகம் என எல்லாத்தை பற்றியும் தெளிவான பார்வை இருக்கு அவரிடம் என கூறினார்.