Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எம்ஜிஆருக்கு பிறகு அஜித்திற்கு தான் அந்த ஈர்ப்பு இருக்கிறது! வாரிசு பிரபலத்தின் அதிரடி பேட்டி

எம்ஜிஆருக்கு இருந்த அந்த ஒரு க்ரேஸ் அவருக்கு பிறகு அஜித்திற்கு தான் உள்ளது என பல சினிமா பிரபலங்கள் பல பேட்டிகளில் கூறியுள்ளதை பார்த்திருப்போம்.

அதை தான் தற்போது பிரபல குணச்சித்திர நடிகர் பாலையாவின் மகன் ஜூனியர் பாலையாவும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், பார்ப்பது அப்புறம், பெயரை சொன்னாலே பிடிக்கும் என்றால் அது இரண்டு பேர் தான். ஒன்று எம்ஜிஆர், அப்பாவுக்கு நல்ல நெருக்கம். நான் குழந்தையில் இருந்து பார்த்து வருகிறேன்.

அவரை எந்தளவிற்கு பிடிக்குதோ அந்த ஈர்ப்பு நான் பார்த்த வரைக்கும் அஜித் சாரிடம் இருக்கிறது. நிறைய ஆர்ட்டிஸ்ட்ட பார்த்திருக்கிறேன். இவர்களது பெயர்களை சொன்னால் என்ன ரியாக்‌ஷன் உள்ளது என்பதை பார்த்திருக்கிறேன்.

தியேட்டரில் மக்கள் திலகம் என்று பார்த்தவுடனே விசில் அடிப்பார்களா இல்லையா அந்தளவிற்கு இவருக்கும் அடிக்கிறார்கள். அவரும் யாரையாவது பார்த்தாலே முதலில் அன்பான கேள்விகளை தான் கேட்பார். அதை தான் இவரும் செய்கிறார் என்றார்.