Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவின் டார்லிங் ஹீரோ யார்? பாகுபலி நாயகன் பிரபாஸ் ஓபன் டாக்

தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் நல்ல படைப்பை வரவேற்பார்கள். அந்த வகையில் எந்த மொழி என்று கூட பார்க்காமல் இங்கு ஓடிய படங்கள் பல.

அப்படி தெலுங்கு சினிமாவான பாகுபலி இங்கு ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இப்படத்தின் நாயகன் பிரபாஸ் அடுத்து சாஹோ என்ற படத்தில் நடித்துள்ளார், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.

அது முடிந்து இவர் அளித்த பேட்டியில் ‘நீங்கள் தான் தெலுங்கு சினிமாவின் டார்லிங், அப்படி தமிழ் சினிமாவில் நீங்கள் பார்ப்பது யார்?’ என கேட்டனர்.

அதற்கு அவர் ‘அஜித் சார், விஜய் சார், ரஜினி சார்’ என பதில் அளித்துள்ளார்.