Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபாஸ்க்கு ரூ 100 கோடி சம்பளம்? உண்மையை கூறிய பாகுபலி, சாஹோ ஹீரோ

பாகுபலி, பாகுபலி 2 என இன்னும் இந்த இரு படங்கள் பலரின் கண்களுக்குள் அப்படியே ஓடிக்கொண்டிருக்கும் தானே. உலகம் முழுக்க பெரும் வசூல் சாதனை செய்த படம் மூலம் சூப்பர் நாயகனாக மாறியவர் நடிகர் பிரபாஸ்.

அவரின் நடிப்பில் தற்போது சாஹோ என்ற ஆக்‌ஷன் படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு அவருக்கு முன்பை விட கூடுதலான சம்பளம் என்றும் படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதால் அவருக்கு பங்குத்தொகை ரூ 100 கோடி என சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் நடிகர் பிரபாஸ் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் பாகுபலி படம் என்னை மிகவும் உயரத்தில் வைத்துவிட்டது. சாஹோ படம் ரூ 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.

அதனால் எனக்கு வழக்கமான சம்பளத்தை கேட்கமுடியாது என தெரியும். எனவே நான் என் சம்பளத்தில் 20 சதவீதத்தை குறைத்துக்கொண்டே நடித்தேன். பிறகு படத்தின் பட்ஜெட் உயர்ந்தது. எனக்கான சம்பளத்தை என்னுடைய நண்பர்கள் தர தயாராக இருந்தார்கள். ஆனாலும் அதை பெற்றுக்கொள்ள மனமில்லை. ஏனெனில் படத்திற்கு எவ்வளவு வசூல் வரும் என தெரியாமல் அவர்கள் செலவு செய்துள்ளார்கள் என உண்மையை கூறியுள்ளார்.