Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தை போல நல்லவர் இதுவரை யாரும் இல்லை! பலரும் அறிந்த நடிகரின் பேச்சு

அஜித்தின் மீதான பெரும் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதே உண்மை. அண்மையில் அவரின் நடிப்பில் வந்த நேர்கொண்ட பார்வை படமும் இதற்கு ஒரு சாட்சி.

சினிமா போக தன் சொந்த வாழ்வில் துப்பாக்கி சுடுதலில் ஆர்வமாக இருக்கும் அவர் அண்மையில் அதன் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றதும் ஆச்சர்யப்படவைத்தது.

அதே வேளையில் அவர் சென்னை பல்கலைகழக மாணவர்களுக்கு ஆளில்லா விமானம் கண்டுபிடிக்க ஆலோசகராக இருந்ததும் அக்குழு உலகளவில் வெற்றி பெற்றதும் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.

அவருடன் பணியாற்றியவர்கள் அனைவரும் அவரின் குணநலன்களை பார்த்து ஆச்சர்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் பிரபல பாடகர் உன்னி மேனனின் உறவினரும், நடிகருமான அனிஷ் அஜித் பல தடைகள், கஷ்டங்கள் தாண்டி இந்த உயரத்திற்கு வந்துள்ளார். இந்த இடத்திற்கு வந்த பின்பும் நம்மை வெற்றி கொள்ள யாரும் இல்லை என்ற எண்ணம் அவரிடம் இல்லை.

நல்ல மனிதர். அவரை போல யாரும் இல்லை. இனிவரப்போவதும் இல்லை. கண்டுபிடிக்கவும் முடியாது என அவர் நேர்காணலில் கூறியுள்ளார்.