சிம்புவின் மகாமாநாடு ட்ராப்! பழைய இயக்குனருடனேயே இணைகிறார்

நடிகர்கள் by Vicky

தமிழகத்தின் சர்ச்சை நாயகன் என்றால் அனைவரின் மனதிலும் சட்டென்று தோன்றுவது சிம்பு தான். நயன்தரா, ஹன்ஷிகாவுடன் காதல், அனிருத்துடன் பீப் சாங், நேரத்திற்கு ஷூட்டிங் வராமல் இருப்பது, இயக்குனரிடம் மோதல், பல படங்களில் ஒப்பந்தமாகி பின்பு தயாரிப்பாளர்களுக்கு கல்தா கொடுப்பது என்று தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கியவர் இவர்.

இவரது நடிப்பில் கடைசியாக வந்தா ராஜாவா தான் வருவேன் படம் திரைக்கு வந்திருந்தது. அதன்பின் பாதியில் நின்ற வெங்கட்பிரபு உடனான மாநாடு படத்தில் நடிப்பார் என்று அவரது ரசிகர்கள் காத்திருந்த நிலையில் சில நாட்களுக்கு முன் மகாமாநாடு என்ற படம் சிம்புவின் இயக்கம் மற்றும் நடிப்பில் 125 கோடி ரூபாய் செலவில் 5 மொழிகளில் தயாராகவுள்ளது என்று அதிரடியாக ஒரு தகவல் வந்தது.

இது கிட்டத்தட்ட உண்மை என்பது போல சினிமா பிரபலங்கள் சிலர் கூட கூறி வந்தனர். ஆனால் தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, சில நாட்களுக்கு முன் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் பிறந்த நாளுக்கு எதிர்பாராதவிதமாக சிம்புவிடம் இருந்து போன் வந்துள்ளது. போனில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிம்பு, தன்னால் ஏற்பட்ட சிக்கல்களுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

அது மட்டுமல்லாமல், மீண்டும் மாநாடு படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த திடீர் திருப்பத்தால் சுரேஷ் காமாட்சி ஆச்சர்யப்பட்டு போனாராம். இதனால் மகாமாநாடு ப்ராஜெக்ட் ட்ராப்பாகி மிக விரைவில் மீண்டும் சிம்பு நடிக்க மாநாடு படம் தொடங்கப்படலாம் என தெரிகிறது. இந்த தகவல் பரவியதால் சினிமா உலகம் பரபரப்பாகியுள்ளது. இந்த விஷயத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தயாரிப்பு தரப்பு அறிவித்தால் மட்டுமே உண்மை தெரியும்.

Loading ...