Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமலின் இந்தியன்-2வில் இணைந்த பிரபல காமெடி நடிகர்!

1996ல் கமலின் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் படமாக மட்டும் அமையாமல் ஒரு ட்ரெண்ட் செட்டராக அமைந்த படம் தான் இந்தியன். இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்த ஷங்கர் இயக்கியிருந்தார்.

தற்போது தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகங்களின் வருகை அதிகரித்துள்ளதால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்க ஷங்கர் திட்டமிட்டார். அதன்படி சில மாதங்களுக்கு முன் பூஜையுடன் துவங்கிய இப்படத்தில் நடிகைகள் காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் நடிகர் சித்தார்த் இணைந்தனர்.

ஆனால் அதன்பின் நாடாளுமன்ற தேர்தலால் தாமதமான இப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஆந்திரா ராஜமுந்திரியில் மீண்டும் துவங்கியுள்ளது. இந்த ஷூட்டிங்கில் பிரபல காமெடி நடிகர் விவேக் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருவேளை இந்த செய்தி உண்மையானால், முதன்முறையாக கமலுடன் விவேக் இப்படத்தின் மூலம் சேர்ந்து நடிப்பார். கமலின் பார்த்தாலே பரவசம் படத்தில் விவேக் நடித்திருப்பார். ஆனால் ஒரு காட்சியில் கூட இருவரும் இணைந்து நடித்திருக்க மாட்டார்கள்.