Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னை பாக்ஸ் ஆபிஸில் அஜித் படைத்த சாதனை வசூல், ரஜினிக்கு அடுத்த இடத்தில்

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வந்தது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நேர்கொண்ட பார்வை சென்னை பாக்ஸ் ஆபிஸில் ரூ 10 கோடிகளுக்கு மேல் வசூலை நேற்று கடந்துள்ளது.

இதன் மூலம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து 3 முறை விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என ரூ 10 கோடி கிளப்பை எட்டியது ரஜினிக்கு பிறகு அஜித் தான்.

விஜய் மெர்சல், சர்கார், தெறி என மூன்று முறை கடந்துள்ளார், ஆனாலும், இடையில் பைரவா சென்னையில் ரூ 7 கோடி மட்டுமே வசூல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.