Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழக பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தில் தல அஜித், அடுத்த இரண்டு இடங்களில் யார் தெரியுமா?

தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வந்த நேர்கொண்ட பார்வை சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இப்படத்தை வாங்கிய அனைத்து திரையரங்குகளும் நல்ல லாபம் என்று கூறிவிட்டனர்.

இந்நிலையில் தல அஜித் தான் தமிழக பாக்ஸ் ஆபிஸில் தற்போது நம்பர் 1 இடத்தில் உள்ளதாம், ஆம், ஒரு வருடத்தில் தமிழகத்தில் அதிக வசூல் கொடுத்த நடிகர்கள் யார் என்ற விவரம் வெளிவந்துள்ளது.

இதில் அஜித் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் மூலம் ரூ 200 கோடி வரை வசூல் தந்துள்ளாராம்.

இதற்கு அடுத்த இடத்தில் மெர்சல், பைரவா மூலம் விஜய் ரூ 185 கோடி, ரஜினிகாந்த் 2.0, காலா மூலம் ரூ 180 கோடி வரை ஒரே வருடத்தில் அதிகம் வசூல் கொடுத்துள்ளார்களாம்.