Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கண்டிப்பாக விஜய்யுடன் அந்த படம் உள்ளது, சென்சேஷன் இயக்குனர் அளித்த பதில்

தளபதி விஜய் தற்போது பிகில் படத்தின் டப்பிங் வேலைகளில் பிஸியாகவுள்ளார். இதை தொடர்ந்து இவர் லோகேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் வசனம், திரைக்கதை அமைக்கும் வேலையில் லோகேஷ் தற்போது பிஸியாகவுள்ளார். இந்நிலையில் விஜய்யிடம் சில வருடங்களுக்கு முன்பு சுப்ரமணியபுரம் இயக்குனர் மற்றும் பிரபல நடிகர் சசிகுமார் ஒரு கதை கூறியுள்ளார்.

அந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்ததாம், அந்த படம் எப்போது என கென்னடி க்ளப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் அவரிடம் கேட்டனர்.

அதற்கு சசிகுமார் ‘விஜய் என்னுடைய நல்ல நண்பர், அவரிடம் ஒரு கதை கூறியிருக்கிறேன், அவருக்கும் மிகவும் பிடித்திருந்தது, கண்டிப்பாக அந்த படம் இருக்கிறது, விஜய் ஓகே சொன்னால், பார்ப்போம்’ என கூறியுள்ளார்.