Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு இப்படி ஒரு நோயாம்! மனதை வலிக்கு செய்த சோகம்

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் பெரும் பணக்காரராகவும் இருப்பவர் நடிகர் அமிதாப் பச்சன். ஏழை விவசாயிகளின் கடன்களை அடைத்து வருவதோடு சமூகத்திற்கான நல்ல விசயங்களையும் செய்து வருகிறார்.

அண்மையில் அவர் தொலைக்காசி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தன் உடல் நிலை குறித்து தெரிவித்த தகவல் பலரையும் அதிரவைத்துவிட்டது.

இதில் அவர் நான் காசநோய், ஹெப்பாடிடீஸ் காய்ச்சலில் இருந்து மீண்டு வந்துள்ளேன். கெட்ட ரத்தம் எனக்கு ஏற்றப்பட்டதன் காரணமாக எனது கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது.

அதனை என்னால் 20 வருடங்கள் கழித்து தான் தெரிந்துகொள்ள முடிந்தது. இதனால் 75 % கல்லீரல் இப்போது கெட்டு விட்டது. தற்போது 25 % மட்டும் செயல்பாட்டில் உள்ளது. அதன் மூலம் வாழ்ந்து வருகிறேன்.

எல்லாவற்றிற்கும் தீர்வு உள்ளது. காச நோய்க்கும் சிகிச்சை உள்ளது. காச நோய் இருப்பதை 8 வருடங்களுக்கு பின்பே தெரிந்துகொண்டேன். அதனால் நீங்களும் உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.