Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெட்கமா இல்ல! ஜெயிக்க முடியாது - ரஜினிகாந்தை வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை சூப்பர் ஸ்டாராக தொடர்ந்து இருந்து வருபவர் நடிகர். உலகம் முழுக்க அவருக்கு ரசிகர்கள் இருக்கின்றார்கள். அவர் அரசியலுக்கு வருவார் என மிகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதே வேளையில் அவரின் சில கருத்துக்கள் சர்ச்சையில் சிக்கின. இதில் தூத்துக்குடி துப்பாக்கி தாக்குதல் சம்பவமும் ஒன்று. இது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் அவரின் மகன் துக்ளக் நடித்துள்ள கடமான் பாறை படத்திற்காக புரமோசன் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

இதில் அவர் நான் அன்றும் இன்றும் ரஜினியின் ரசிகன் தான். அவருடன் படத்திலும் நடித்துள்ளேன். தூத்துக்குடி சம்பவத்தில் தீவிரவாதி இருந்தார் என ரஜினி சொன்னாரே? அவரை நிரூபிக்க சொல்லுங்கள் நான் என் தலையை மொட்டை அடித்துக்கொள்கிறேன்..

வெட்கமா இல்ல, உங்கள் காசு தமிழ் மண்ணில் இருந்து மக்கள் கொடுத்த காசு, தொழிலாளித்துவம் தான் ஜெயிக்கும், முதலாளித்துவம் ஒருபோதும் ஜெயிக்காது. படத்திலும் அப்படித்தான் என கூறியுள்ளார்.