Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி-64 படக்குழுவுக்கு வாழ்த்து சொன்ன பிகில் பட தயாரிப்பாளர்! இவரே சொல்லிட்டாரா

கடந்த வருடம் சர்கார், 2017 ல் மெர்சல் படங்களை தொடர்ந்து இந்த வருடம் தீபாவளிக்கு விஜய்யின் நடிப்பில் பிகில் படம் வெளியாகவுள்ளது. அட்லீ இயக்கியுள்ள இப்படத்திற்கு அடுத்ததாக மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் அனிருத் இசையில் விஜய் நடிக்கவுள்ளார் என்று பல மாதங்களாகவே கூறப்பட்டு வந்தது.

ஆனால் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகாமலே இருந்தன. இந்நிலையில் தான் நேற்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் படத்தை அக்டோபரில் தொடங்கி ஏப்ரல் 2020 ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் ஒன்றுடன் வெளியானது.

இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் செம்ம குஷியாகியுள்ள நிலையில், தளபதி-64 படக்குழுவுக்கு பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.