Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய் குறித்து பிரபாஸ் கூறிய மாஸ் பதில்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்டவர். இவர் நடிப்பில் தீபாவளி விருந்தாக பிகில் படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்ட படமான சாஹோ இந்த வாரம் திரைக்கு வருகின்றது, இப்படத்தை பலரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடக்க, இதில் பிரபாஸிடம் ‘பாகுபலி படத்தில் தளபதி விஜய் நடித்தால் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கலாம்?’ என்று கேட்டனர்.

அதற்கு பிரபாஸ் ‘ஏன் பாகுபலியாகவே அவர் நடிக்கலாம்’ என கூறி ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளார்.