Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் சங்க விவகாரத்தில் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

தமிழ் சினிமா நடிகர், நடிகைகளுக்கான நடிகர் சங்கம் சென்னை தி நகர் அபிபுல்லா சாலையில் செயல்பட்டு வருகிறது. இதற்காக தற்போது ரூ 26 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இதற்காக அங்கிருக்கும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்படுவதாக வித்யோதயா காலனியை சேர்ந்த ஸ்ரீரங்கம் மற்றும் அண்ணாமலை ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

இதனால் அண்மையில் கட்டிடம் கட்ட இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வழக்கை விசாரித்த நீதிபதிகள் சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படவில்லை என கூறி வழக்கௌ தள்ளுபடி செய்துள்ளது.