மனைவியுடன் மாஸ் லுக்கில் வந்த விஜய்! முக்கிய அரசியல் தலைவரை சந்தித்து வாழ்த்து - வைரலாகும் புகைப்படங்கள்
பிகில் படத்தில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் நேற்று வெளியானது. வந்த சில நிமிடங்களிலேயே பெரும் சாதனையை இணையதளத்தில் செய்தது.
அது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. டிரெண்டிங்கிலும் உச்சத்தில் தான் இருக்கிறது. பிகில் லுக்கில் விஜய்யை பார்க்க பலருக்கும் ஆர்வம் தான்.
அவரை பொது இடத்தில் பார்த்தால் பெரும் கூட்டம் அவரை சுற்றி திரண்டு விடும். அந்த வகையில் நேற்று அவர் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு தன் மனைவி சங்கீதாவுடன் சென்றிருக்கிறார்.
அங்கு திமுக தலைவர் ஸ்டாலினும், பொருளாளர் துரைமுருகன், வைரமுத்து ஆகியோரும் வந்துள்ளனர்.
விஜய் ஸ்டாலினை பார்த்து நேரில் வாழ்த்து கூறியுள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
பிகில் படத்தில் இருப்பது போல அவரின் லுக் இருந்ததை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
EXCLUSIVE VIDEO of #Thalapathy #Vijay from a wedding function at Leela Palace. @ActorVijayFP #BigilTamilMovie pic.twitter.com/Oubz1YCYn2
— #BIGIL (@BigilTamilMovie) September 2, 2019