அரசியல் கட்சி தலைவரை திடீரெனெ சந்தித்த நடிகர் விஜய்.. வைரலாகும் புகைப்படம்
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கும் ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். எம்.ஜி.ஆர், ரஜினி வரிசையில் அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் என அவரது அம்மா சமீபத்தில் எழுதிய கடிதம் வைரலானது. அதன் பிறகு தமிழ்நாட்டை தமிழன் தான் ஆழ வேண்டும் என அவரது அப்பா எஸ்ஏசி பேசியது ரஜினி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு விஜய் பற்றி சீமான் பேசியதும் வைரலானது.
இந்நிலையில் தற்போது விஜய் ஒரு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் கொள்ளுப்பேத்தியின் நிச்சயதார்த்த விழாவில் தான் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.