Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படம் மூலம் விஜய் செய்த பெரிய சாதனை- படு கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

அட்லீ இயக்க விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது பிகில். படத்திற்கான வேலைகள் இடைவேளை இல்லாமல் நடந்து வர தயாரிப்பாளர் இனி அப்டேட் வரும் என அறிவித்திருந்தனர்.

படம் சம்பந்தப்பட்டு அண்மையில் வெளியானது விஜய் பிகில் படத்தில் பாடிய வெறித்தனம் பாடல். முதன்முதலாக ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் விஜய் பாடிய இந்த பாடலுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது, அதேபோல் பாடலும் செம ஹிட்.

தற்போது இந்த பாடல் யூடியூபில் குறுகிய நாட்களில் 1 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளதாம். இதனால் வழக்கம் போல் ரசிகர்கள் #VerithanamFastest1Mlikes, #VerithanamHitsRecord1MLikes போன்ற டாக்குகளை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர். ஒரு பாடல் வரிகள் கொண்ட வீடியோ இவ்வளவு மில்லியன் லைக்ஸ் பெற்றது இதுவே முதல்முறையாம்.