Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கட்சி ஆரம்பிக்க சொன்ன பிரபல நடிகர்- அதற்கு தல அஜித் சொன்ன பதில் என்ன தெரியுமா?

சினிமாவை தாண்டி ரஜினி-கமல் இருவரும் அரசியல் பக்கமும் கவனம் செலுத்தி வருகின்றனர். கமல்ஹாசன் அவர்கள் முழு வேலையாக அரசியல் விஷயங்களை கவனித்து வந்தாலும் இன்னும் ரஜினி அவர்கள் இந்த பக்கம் வரவில்லை.

அறிவிப்பு வெளியிட்டதோடு சரி, படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவரை தொடர்ந்து விஜய் அரசியல் பிரவேசம் பற்றியும் அதிகம் பேசப்படுகிறது.

நடிகர் ரமேஷ் கண்ணா அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், அஜித் அவர்களிடம் சீக்கிரம் கட்சி ஆரம்பிக்கவும், அதில் நான் சேர்ந்துவிடுகிறேன் என்பேன்.

அதற்கு தல வேலையை பாருங்கள், நாம் நடிக்கிறதோடு நிறுத்திவிட வேண்டும் என்று கூறுவார் என ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.