Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive: பா, ரஞ்சித்தின் அடுத்த பிரம்மாண்ட படம்- ஒரே படத்தில் 3 முன்னணி நடிகர்கள்?

பா. ரஞ்சித் கடைசியாக இயக்கிய படம் காலா. அப்படத்தை தொடர்ந்து அவர் படங்கள் தயாரிக்கும் வேலைகளில் பிஸியாக இருந்தார்.

இப்போது அவருடைய அடுத்தப்படம் குறித்து ஒரு தகவல். அதாவது பா.ரஞ்சித், ஆர்யா, கலையரசன், அட்டகத்தி தினேஷ் 3 பேரை வைத்து ஒரு பாக்சிங் கதையை இயக்க இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், நம் தரப்பில் கலையரசனிடம் கேட்ட போது ‘நான் தற்போது ஏதும் சொல்ல முடியாது, தயாரிப்பாளர் தரப்பு சொன்னால் தான் நன்றாக இருக்கும்’ என கூறினார்.

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் தயாரிக்க இருக்கும் இப்படம் குறித்து மற்ற எந்த தகவலும் வெளியாகவில்லை.