Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இப்படித்தான் சொகுசு கார் வாங்கினார் தனுஷ்.. தாக்கி பேசிய தயாரிப்பாளர்களுக்கு பதிலடி கொடுத்த பிரபலம்

நடிகர் தனுஷ் அசுரன் பட விழாவில் பேசும்போது தயாரிப்பாளர்களிடம் இருந்து சம்பளம் வாங்குவது கஷ்டம் என பேசியிருந்தார். அதற்கு பல தயாரிப்பாளர்கள் கடும் கோபத்துடன் அவரை விமர்சித்திருந்தனர்.

தனுஷை வைத்து படம் எடுத்தால் நஷ்டம் தான், அவர் மட்டும் சொகுசு காரில் செல்கிறார், தயாரிப்பாளர்கள் வீட்டை விற்று விட்டு தெருவில் நிற்கிறார்கள் என்றெல்லாம் சில தயாரிப்பாளர்கள் பேட்டி அளித்தனர்.

இந்நிலையில் இது பற்றி பேசியுள்ள ஒண்டெர்பார் பிலிம்ஸ் நிர்வாக இயக்குனர் வினோத், தனுஷ் லோன் போட்டு தான் கார் வாங்கியுள்ளார் என்றும் இன்னமும் இஎம்ஐ கட்டிக்கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொடி படத்தில் 10 கோடி ருபாய் மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் 3.75 கோடி ருபாய் இன்னும் தனுஷுக்கு சம்பள பாக்கி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.