Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் கமல் ஹாசனுடன் கைகோர்த்த பிரபல நடிகர்கள்! முக்கிய சம்பவத்தால் கடும் எதிர்ப்பு

கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று அவர் அண்மையில் கட்டவுட் விழுந்ததில் சாலை விபத்தில் பரிதாபாக உயிரிந்த சுபஸ்ரீ குறித்து கவலை தெரிவித்திருந்தார்.

மேலும் இனி ரசிகர்கள் தனக்கு கட்டவுட் வைக்க வேண்டாம் என கூறியிருந்தார். இந்நிலையில் சமூக நல தொண்டுகள் செய்து வரும் காமெடி நடிகர் விவேக் கண்ட இடங்களில் பேனர்,போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப் பட வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும் என கூறியுள்ளார்.

தற்போது நடிகர் சூர்யாவும் தயவு செய்து ரசிகர்கள் எந்த ஊரிலும் பேனர்கள் வைக்கக் வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்ற அவர், பேனர் வைக்காமல் அந்த செலவை கல்வி உதவிக்காக பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என ரசிகர்களை கேட்டுக்கொண்டார்.

அதே போல நடிகர் விஜய் பிகில் பட இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் யாரும் பேனர் வைக்கக்கூடாது என நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளதாக விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் மதுரையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் இனி எந்த நிகழ்விலும் பேனர் வைக்க மாட்டோம் என ரசிகர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர்.