Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவின் லாஸ்லியா காதல் முக்கியமா போச்சா? யார் எதிரி? உயிர மயிரா நினைக்கிறாங்க கொந்தளித்த பிரபல நடிகர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக கவின் லாஸ்லியா காதல் பற்றி தான் பேசப்பட்டு வந்தது. அதன் பின் நடந்ததெல்லாவற்றையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் தானே. பின் அவர்களுக்கு அனைவரும் அறிவுரை வழங்கினார்கள்.

அண்மையில் சமூக நல ஆர்வலரான நடிகர் ஆரி, காதல் அம்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர்

சமீபகாலமாக கவின் லாஸ்லியா காதல் பற்றி பேசுகிறார்கள். சேரன் காதலுக்கு எதிரியல்ல.

அவர் விளையாட்டை விளையாடுங்கள், மற்றதை வெளியே போய் பேசிக்கொள்ளலாம் என தான் கூறினார். இதுபற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் சுபஸ்ரீ மரண சம்பவம் முக்கியமான ஒன்று. பேனர் விழுந்து விபத்துக்குள்ளாகி பரிதாபமாக இறந்துள்ளார். இதெல்லாம் சினிமாவில் தான் என்பார்கள்.

ஆனால் இப்போது உண்மையிலேயே துயரமான சம்பவம் நடந்துள்ளது. உயிர் மயிர்போலாகிவிட்டது. மதிப்பில்லை. பேனர் கலாச்சாரம் ஒழிக்கப்படவேண்டும்.

ரஜினி சார் தர்பார் படத்திற்கு பேனர், கட்டவுட் வைக்கக்கூடாது, கமல், அஜித், விஜய் என அனைவரும் ரசிகர்களுக்கு எடுத்துச்சொல்லவேண்டும் என கோபத்துடன் பேசினார்.