நீங்களும் விஜய்யும் சேர்ந்தால் சும்மா தெறிக்கும், பிரபல நடிகரிடம் விஜய் தரப்பே சொன்ன தகவல்
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக பிகில் படம் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் விஜய் அடுத்து மாநகரம் இயக்குனர் லோகேஷுடன் கைக்கோர்த்துள்ளார். அதை தொடர்ந்து அவர் யாருடன் இணைவார் என்று பெரிய விவாதம் நடந்து வருகின்றது.
ஆனால், பல வருடங்களுக்கு முன்பே விஜய்யின் தந்தை, நடிகர் பார்த்திபனிடம் ‘நீங்கள் விஜய்யை வைத்து ஒரு படம் எடுத்தால் செம்ம மேஜிக் உருவாகும்’ என்று கூறினாராம்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் இதை பார்த்திபன் பகிர்ந்துள்ளார், மேலும், அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால் கண்டிப்பாக விஜய்யின் மாஸ் படமாக தான் அது இருக்கும் என்று கூறியுள்ளார்.