Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய் சொன்ன குட்டி கதை.. பிகில் இசை வெளியீட்டு விழாவில் கொண்டாடிய ரசிகர்கள்

வழக்கமாக விஜய் எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினாலும் எதாவது ஒரு குட்டி கதை சொல்லி தன்னுடைய ரசிகர்களுக்கு அறிவுரை வழங்குவது வழக்கம்.

பிகில் பல இசை வெளியீட்டு விழாவிலும் விஜய் அப்படி ஒரு குட்டி கதை கூறியுள்ளார்.

"பூக்கடையில் ஒருத்தன் வேலை பார்த்துகிட்டு இருந்திருக்கான். பொக்கே ஷாப்னு வெச்சுக்கோங்க. திடீர்னு அவனுக்கு அங்க வேலை போய்டுச்சு. இவன் எங்கு வேலை செய்தான் என தெரியாமலேயே அவனுக்கு வேண்டப்பட்ட ஒருவர் அவரின் பட்டாசு கடையில் வேலைக்கு சேர்த்துக்கொள்கிறார்."

"வெடி கடையில் அவனை உட்கார்ரச்சிடுறாங்க. அங்கு ஒரு வெடி கூட விக்கலையாம். என்னடானு பார்த்தா.. 10 நிமிஷத்துக்கு ஒருமுறை வாளியில் தண்ணீர் எடுத்து கொண்டு சென்று அவன் பட்டாசு மீது தெளித்துள்ளான். தொழில் பக்தி அவனை விட்டு போகல. யார் மேல தப்பு. The moral of the story is.. இந்த வேண்டியவன் வேண்டாதவன் என்பதை விட்டுட்டு திறமைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கணும். எவனை எங்க உட்கார வைக்கணுமோ அவனை அங்கங்க கரெக்ட்டா உட்கார வைக்கணும்" என விஜய் கதையை கூறி முடித்துள்ளார்.