Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் மேடையில் விஜய் பேசிய முக்கிய விஷயத்தை கட் செய்த சன் டிவி! கடும் கோபத்தில் விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய் பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசியது நேற்று ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சி நடந்து மூன்று நாட்கள் முடிந்த நிலையில் தற்போது விஜய் பேசியதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்தனர்.

ஆனால் விஜய் பேசிய காட்சிகளில் எடிட்டிங் செய்து சில வரிகளை நீக்கியுள்ளனர். பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ விஷயத்தில் விஜய் கோபமாக பேசிய கருத்து தான் நீக்கப்பட்டுள்ளது.

"தவறு செய்பவர்களை கைது செய்யாமல் பேனர் பிரிண்ட் செய்பவர்கள், ஓட்டுநர் என பாலி போடுகிறார்கள்" என விஜய் பேசியிருந்தார்.

அதை நீக்கிய சன் டிவி மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் சன் டிவியை திட்டி வருகின்றனர்.