Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இனி அஜித்தை ரசிகர்கள் பார்க்கவே முடியாதா?- செய்தி கேட்டு ரசிகர்கள் ஷாக்

அஜித் தமிழ் சினிமாவில் எளிதில் வெளியே பார்க்க முடியாத ஒரு நடிகர். அவர் ஒரு இடத்திற்கு வந்துவிட்டார் என்று தெரிந்தால் உடனே அங்கு ரசிகர்கள் கூட்டம் கூடிவிடும்.

பாஸ்போர்ட் பெறுவதற்காக அவர் அலுவலகத்திற்கு வந்ததும், அங்கு கூட்டம் அதிகமாக கூடவே அரசு காரிலேயே அவரை வீட்டிற்கு அவர்கள் அழைத்து சென்ற விஷயம் எல்லாம் நமக்கு நன்றாக தெரிந்த விஷயம்.

படப்பிடிப்பு தளங்களை தாண்டி அவரை டப்பிங் ஸ்டூடியோவில் ரசிகர்கள் பார்ப்பார்கள். ஆனால் அதற்கும் இப்போது பிரச்சனை வந்துவிட்டது. அதாவது அஜித் அவர்கள் தன்னுடைய வீட்டிற்குள்ளேயே ஒரு டப்பிங் ஸ்டூடியோவை கட்டி வருகிறாராம்.

அதன் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதைக் கேட்டு அஜித்தை பார்க்க முடியாதே என்ற சோகத்தில் ரசிகர்கள் உள்ளார்கள்.