Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல ஹீரோக்களின் படங்களை வெளியிட்ட திரையரங்கம் செய்த மோசமான செயல்! அதிரடி தண்டனை

பிரபலங்களின் படங்கள் வெளியாகிறது என்றால் தியேட்டர் வட்டாரம் பரபரப்பாக திருவிழா போல காணப்படும். இதில் அஜித், விஜய், சூர்யா, ரஜினி என பலரின் படங்களுக்கும் பெரும் கொண்டாட்டம் இருக்கும்.

தமிழ்நாட்டில் சென்னையை சினிமா சிட்டி என்பார்கள். இங்கு பல முக்கிய திரையரங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று ரோஹினி சினிமாஸ். இங்கு அரசால் குறைந்தபட்ச கட்டணமாக ரூ 40 ம், அதிகபட்சமாக ரூ 100 ம் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மல்ட்டிபிளக்ஸ் அல்லாத நிலையிலும், நகராட்சி எல்லைக்கு உட்பட்ட இடத்திலும் இந்த கட்டணம் விதிமுறையில் உள்ளது. இங்கு மூன்று மடங்கு விலைக்கு டிக்கெட் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் சென்னை செம்பியம் தேவராஜன் என்பவர் கடந்த ஜூலையில் தான் கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்த போது டிக்கெட் கட்டணம் ரூ 150 ம், முன்பதிவு கட்டணம் ரூ 35.40 ம் சேர்த்து மொத்தமாக ரூ 185.40 ஐ பிடித்தம் செய்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளானவர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் புகார் பதிவு செய்தார். விசாரணைக்கு பின் அவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ 10 ஆயிரமும், கூடுதல் கட்டணத்திற்காக ரூ 5 ஆயிரமும் தியேட்டர் நிறுவனத்திற்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாம்.