Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தடம், சாஹோ என கலக்கிய நடிகர் அருண் விஜய்க்கு நேர்ந்த சோகம்!

நடிகர் அருண் விஜய்க்கு அண்மையில் வெளியான சாஹோ படம் கலவையான விமர்சனங்களை பெற்று தந்தாலும் நல்ல வசூல் ஈட்டியது. நடிப்பில் அடுத்ததாக மாஃபியா வெளியாக தயாராகிவருகிறது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பரபரப்பை கூட்டியது. இதனையடுத்து அருண் விஜய் வாகா பட இயக்குனர் குமார வேலன் இயக்கத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக குப்பத்து ராஜா படத்தில் நடித்த பாலக் லாவாணி நடிக்கிறார்.

இப்படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அவர் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். மேலும் ஒவ்வொரு தழும்பு ஒரு கதை சொல்லும். என மிக பிடித்தமான ஸ்டண்ட் சில்வாவுடன் இணைந்ததில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.